தென்னங் குரும்பை அரும்ப,
கீற்றோ கீதம் இசைக்க,
செங்கதிரோன் செங்கம்பளத்தால் ஆழியை அணைக்க,
இருள் இறந்து ஒளி பிரசவிக்க,
ஆலய மணி காற்றுடன் கலக்க,
பலாச் சுவையை பறவைகள் சுவைக்க,
வலை ஏற்றி வள்ளம் கடலிறங்க,
ஊர்வன உள்வராமல் முற்றத்தில் கோலம் காக்க,
பெற்றவளின் கைகள் புதல்வனை தட்டி எழுப்ப,
நித்திரை என்ற மரணம் கலைந்து,
புத்துயிர் பெற்றன கண்கள்....
இவையாவும் அறியா நகரம் நரகமே...
பெற்றவளின் கைகள் புதல்வனை தட்டி எழுப்ப,
ReplyDeleteபாவத்திற்கு அர்த்தம் என்றும் உணராமல் அந்த மழலை சிலிர்க்க,
அன்புக்கு பஞ்சம் இல்லை என்று தன் சிறகுகளை விரிக்க...
Nice one da!
www.reginmoses.in
Sorry regin that i asked whether u can read tamil...
ReplyDelete